YSS சென்னை சாதனாலயாவை பற்றி

English

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS), 1917-ல் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் ஆன்ம-விடுதலையளிக்கும் கிரியா யோகப் போதனைகளைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டது. யோகதா சத்சங்க சென்னை சாதனாலயம், YSS சாதனாலய மையமாகும் — இறைவனுடன் இயற்கையான தொடர்பை அளிக்கும் ஓர் ஆன்மீக ஆலயம்.  

ஒரு வளமையான வரலாறு

YSS சென்னை சாதனாலயத்தின் தற்போதைய நிலம், YSS அன்பரான, அர்ப்பணிப்பு மனம் படைத்த திரு. கெய்டன்டே அவர்களால் 1998–ல் ஒய் எஸ் எஸ்-க்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அனேக அன்பர்கள் இந்த அடர்த்தியான வனப்பகுதியை வசிக்கத்தக்க, அழகான, அமைதியான ஆலயமாக மாற்றுவதற்கு கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

 

ஸ்ரீபெரும்புதூர், இந்திய மகான்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களில் ஒருவரான ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த இடமாகும்.  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சென்னை சாதனாலயம், புனிதமானவர்களின் வருகையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. 2006 டிசம்பர் 31 – அன்று ஸ்வாமி சாந்தானந்த கிரி, பிரதான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்

2010-ல் ஸ்வாமி சுத்தானந்த கிரி, இந்த சாதனாலயத்தில்  முதல் பிராந்திய சாதனா சங்கத்தை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி, பெங்களுரு, மைசூரு, கொச்சின், சித்தூர் மற்றும் அருகிலுள்ள பிற நகரங்களிலிருந்தும் அன்பர்கள் பங்கேற்றனர்.  YSS சன்னியாசிகள் தொடர்ந்து தவறாமல் இங்கு வருகைபுரிந்து, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சாதனாலயத்தின் வளர்ச்சியை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இட அமைப்பு மற்றும் வசதிகள்

சென்னை கேந்திராவிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள சாதனாலயம், நெருக்கடியும் சந்தடியும் நிறைந்த நகர வாழ்க்கை எட்டாத தூரத்தில் அமைந்துள்ளது. ஓர் ஏரிக்கும் காப்புக் காட்டிற்கும் இடையே, அவற்றை ஒட்டி அமைந்து மௌனம், ஏகாந்தம் மற்றும் அமைதியான உள்முக நோக்கிற்கான மிகவும் பொருத்தமான சூழ்நிலையை அளிக்கின்றது. 

சாதனாலய நிலப்பரப்பு மற்றும் வசதிகள் பற்றிய படக்காட்சிகள்

ஸ்ரீபெரும்புதூரில் பதினேழு ஏக்கர் பரப்பளவில் உள்ள YSS சென்னை சாதனாலயம் தற்போது கீழ்க்கண்ட வசதிகளைப் பெற்றுள்ளது:

  • ஏறக்குறைய 15 ஏக்கரில் தோப்பு மற்றும் காய்கறித் தோட்டம்
  • தனிப்பட்ட தியானத்திற்கென மூன்று குடில்கள் மற்றும் ஒரு தியான கோபுர மேடை
  • பால் கொடுக்கும் இரண்டு பசுக்கள் கொண்ட கோசாலை
  • 60 பக்தர்கள் அமரக்கூடிய குளிர்சாதன வசதியுள்ள தியான கூடம்
  • தங்கும் இடவசதி: 
    • ஆடவருக்கான இடவசதி: 30 படுக்கைகள்
    • பெண்களுக்கான இடவசதி: 24 படுக்கைகள்
    • குளிர்சாதன வசதியுள்ள தனி அறை:  8 அறைகள். 
  • சமையலறை மற்றும் உணவுக்கூடம்:  50 இருக்கைகள் கொண்ட உணவருந்தும் வசதி

சாதனாலயத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள்

2024 பிப்ரவரியிலிருந்து ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் சாதனாலயத்தில் தங்கியிருந்து பக்தர்களுக்கு ஆன்மீக அறிவுரை வழங்கி, நினைவு நாள் நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.

தினமும் காலையிலும் மாலையிலும் தியான கூடத்தில் கூட்டு-தியானம் நடக்கின்றது. அன்பர்கள், மாத-வாரியான நீண்டநேர தியானம், சத்சங்கம், ஏகாந்தப் பயிற்சிகள் ஆகிய சிறப்பு YSS இணையதள (online) நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கின்றனர்.

YSS பக்தர்களின் குழந்தைகளும் கோடைக் காலத்தில் நடைபெறும் வருடாந்திர முகாம்களில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். சிறு தியானத்துடன் இடையிடையே வேடிக்கை விளையாட்டு, பங்கேற்பவர்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தருடைய “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகள் குழந்தைகளுக்குக் கற்பிக்கப் படுகின்றன.

சாதனாலயத்தின் செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பேடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நமது மறைந்த அன்பிற்குரிய YSS/SRF தலைவி மற்றும் சங்கமாதா-வான ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா, அன்பர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் சாதனாலயாவிற்கு அருளாசி வழங்கியுள்ளார்: “. . . இந்த இடம், பக்தர்கள் அவ்வப் பொழுது சென்று புத்துணர்ச்சியும் புத்துயிரும் பெறுவதற்கான ஓர் ஆன்மீக அமைதிச் சோலையாக விளங்கட்டும்.”


தொடர்புக்கு:

யோகதா சத்சங்க சாதனாலயம்,
மண்ணூர் போஸ்ட், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா,
காஞ்சிபுரம், தமிழ்நாடு – 602105 

தொலைபேசி: 75500 12444, 99809 40530, 97909 01810
ஈமெயில்:
[email protected]


பணி நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை

சாதனாலயத்தை அடைவதற்கான வழிகாட்டி