YSS சென்னை ஏகாந்தவாச மையத்தில் சேவை நடவடிக்கைகள்

English

மற்ற YSS/SRF பக்தர்களுடன் சேர்ந்து, சென்னை யோகதா பக்தர்கள், மையத்தின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கு மட்டுமல்லாமல், ஏகாந்த வாச மையத்தைச் சுற்றியுள்ள சமூகங்களின் நலனுக்காகவும் பங்காற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

YSS இன் இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களில் ஒன்றான "மனித இனத்தைத் தன்னுடைய பெரிய ஆன்மாவாகக் கருதி சேவை செய்தல்,” என்பதன் அடிப்படையில், சென்னை ஏகாந்தவாச மையம் பல ஆண்டுகளாக சேவை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சமீப காலங்களில் பக்தர்கள் மேற்கொண்ட மற்றும் நிறைவேற்றிய நடவடிக்கைகளின் ஒரு கண்ணோட்டம் இங்கே தரப்பட்டுள்ளது:

ஆன்மீக உதவிகள் சென்றடையச் செய்தல்:

  • மண்ணூர் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு வழிநடத்தப்பட்ட தியானம் நடத்தப்பட்டது; YSS பாடங்களுக்கு பல நேர்மையான மெய்ப்பொருள் நாடுபவர்கள் பதிவு செய்தனர்.

கல்வி சார்ந்த  உதவிகள் சென்றடையச் செய்தல்:

  • திருக்கழுக்குன்றம், அன்னை சத்யா நகர் மற்றும் கீரப்பாக்கம் போன்ற பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்காக ஒய்.எஸ்.எஸ் பக்தர்களால் பயிற்சி மையங்கள் (இரவுப் பள்ளி வகுப்புகள்) தொடங்கப்பட்டன.

  • இந்த முயற்சி எழுத்தறிவு விகிதத்தை மேம்படுத்தி, பள்ளிப்படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது; மேலும், பெண்கள் தையல் போன்ற தொழில் திறன்களைப் பெறுவதற்கான சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • YSS ராஞ்சி மற்றும் சென்னை YSS பக்தர்களின் ஆதரவுடன், உதவித்தொகைகள், புத்தகங்கள், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் அண்டை சமூகங்களுக்கு தவறாமல் வழங்கப்படுகின்றன.  திருக்கழுகுன்றத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கான டியூஷன் சென்டரில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாத மதிப்பூதியம் மூலம் ஊதியம் வழங்கி வருகிறோம். 

மருத்துவ உதவி சென்றடையச் செய்தல்:

  • YSS சென்னை கேந்திராவைச் சேர்ந்த மருத்துவர்களாயிருக்கும் பக்தர்கள் அருகிலுள்ள மண்ணூர் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மருத்துவ முகாம்களை தொடர்ந்து ஏற்பாடு செய்துள்ளனர். அடிக்கடி கண் பரிசோதனை மற்றும் பல் பரிசோதனை முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கண் பரிசோதனை முகாம்களின் போது, தாராளமாகவே தேவைப்படுபவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

மன்னூர் கிராமத்திற்கு உள்கட்டமைப்பு உதவி: 

  • மண்ணூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அப்பகுதியில் ஆழ்துளை குடிநீர் கிணறு அமைக்க YSS உதவி செய்தது.

  • மண்ணூர் கிராமத்தில் ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கான கழிப்பறை தொகுதி YSS ஆல் கட்டப்பட்டது