2024, பிப்ரவரி 7 முதல் சென்னை ஏகாந்தவாச மையத்தில் YSS சன்னியாசிகளின் தொடர் இருப்பு

English

YSS சென்னை ஏகாந்த வாச மையம் குறித்த ஒரு முக்கிய தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

தென்னிந்தியாவில் உள்ள YSS பக்தர்களுக்கு மேலும் சிறப்பாக சேவை செய்வதற்காக, பிப்ரவரி 7, 2024 முதல் YSS சன்னியாசிகள் சென்னை ஏகாந்த வாச மையத்தில் தொடர் முறையில் தங்கியிருப்பார்கள். குறைந்தது இரண்டு சன்னியாசிகள் இந்த மையத்தில் தங்கியிருப்பார்கள். அவர்கள் தியானம் வழிநடத்துவார்கள், சிறப்பு நிகழ்வுகள் நடத்துவார்கள், வருகை தரும் பக்தர்கள் மற்றும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆன்மீக ஆலோசனைகள் வழங்குவார்கள், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள முக்கிய மையங்களுக்கு அவ்வப்போது வருகை தருவார்கள். தென்னிந்தியாவில் ஒரு ஆசிரமத்தை நிறுவி, அனைவருக்கும் ஆன்மீக புகலிடத்தை உருவாக்குவது என்ற எங்கள் நீண்டகால கனவை நனவாக்குவதற்கான முதல் படியாக இந்த ஆரம்ப நடவடிக்கைகளை நாங்கள் கருதுகிறோம்.

எங்களது திட்டங்கள் மற்றும் ஏகாந்த வாச மையத்தில் வரவிருக்கும் நிகழ்வுகள் பற்றியும், அவற்றிலிருந்து நீங்கள் எவ்வாறு பயனடையலாம் என்பது பற்றியும் மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.

தென்னிந்திய YSS பக்தர்களுக்கு ஒரு ஆன்மீகச் சோலை

17 ஏக்கர் வளாகம்

கடந்த சில ஆண்டுகளாக யோகானந்தரின் போதனைகள் மீது ஆர்வம், குறிப்பாக தென்னிந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. நமது YSS பக்தர் சமூகத்தில் தென் மாநில பக்தர்கள் கணிசமான அளவில் உள்ளனர். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் YSS பாடங்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டதன் காரணமாக, இந்தப் பகுதியில் குருதேவரின் போதனைகள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இதன் விளைவாக, இந்த பகுதியில் உள்ள பக்தர்களிடமிருந்து அவர்களின் பயிற்சிக்கு உதவ சன்னியாச வழிகாட்டுதலுக்கான பல கோரிக்கைகளை நாங்கள் பெறுகிறோம்.

தற்போது, நான்கு YSS  ஆசிரமங்களும் இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ளன, இதனால் தெற்கு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அவற்றை அடைய நீண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சென்னை ஏகாந்த வாச மையம், அதன் சன்னியாசிகள் இருப்புடன், தென் பகுதியில் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள பக்தர்களுக்கு வசதியான மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஆன்மீக சரணாலயமாக மாறும் என்று நம்புகிறோம்.

பதினேழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை ஏகாந்த வாச மையம் தற்போது பின்வரும் வசதிகளையும் சௌகரியங்களையும் கொண்டுள்ளது:

  • 15+ ஏக்கர் மரத்தோப்பு மற்றும் காய்கறி தோட்டம்
  • தனிப்பட்ட தியானத்திற்கான மூன்று கெஸெபோக்கள்/தோட்ட அறைகள் மற்றும் ஒரு தியான டவர்/பீடம்
  • சமையலறை தேவைகளுக்கு பால் வழங்கும் இரண்டு பசுக்கள் கொண்ட கோசாலை
  • 60 பக்தர்கள் வரை அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட தியான அறை
  • சமையலறை மற்றும் உணவு அறை: 50 இருக்கைகள் கொண்ட உணவு அறை
  • தங்குமிடம்:
    • ஆண்களுக்கான குளிரூட்டப்பட்ட பொது தங்குமிடம்: 30 படுக்கைகள்
    • பெண்களுக்கான குளிரூட்டப்பட்ட பொது தங்குமிடம்: 24 படுக்கைகள்
    • குளிரூட்டப்பட்ட ஒற்றை அறை பக்தர் தங்குமிடம்: 8 அறைகள்
   
 

பத்தாண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்ட பல பக்தர்களின் அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை மற்றும் பங்களிப்புகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது இந்த ஏகாந்த வாச மையத்தை செழித்து வளரச் செய்து, அனைத்து YSS / SRF பக்தர்களுக்கும் கிடைக்கச் செய்துள்ளது.

ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் காணிக்கைகள்

சென்னை ஏகாந்த வாச மையத்தில் தங்கியிருக்கும் YSS சன்னியாசிகள் கீழ்காணும் நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்:

  • தினசரி தியானங்கள்
  • சென்னை ஏகாந்த வாச மையத்தில்/சென்னை கேந்திராவில் வாராந்திர சத்சங்கங்கள் மற்றும் நினைவு நிகழ்ச்சிகள்
  • ஏகாந்த வாச மையத்தில் பிப்ரவரி (தமிழ்), மார்ச் (ஆங்கிலம்) மற்றும் ஏப்ரல் (தமிழ்) இல் சாதனா சங்கங்கள்
  • அருகிலுள்ள மாநிலங்களில் உள்ள முக்கிய மையங்களுக்கு விஜயம் (ஏப்ரல் முதல்)
  • குழந்தைகளுக்கான கோடைக்கால முகாம்கள்

இந்த ஆண்டிற்கான விரிவான நிகழ்ச்சித்திட்டம், ஏகாந்தவாச மையத்தின் இணையதளத்தில் (பிற பயனுள்ள தகவல்களுடன்) கிடைக்கிறது. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெற அனைவரையும் வரவேற்கிறோம்.

ஏரி மற்றும் தேசிய வனப்பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த அமைதியான மற்றும் பரந்த வளாகம் வழங்கும் வாய்ப்பை ஏற்று, பக்தர்கள் இதை தங்களது தனிப்பட்ட பயிற்சி மற்றும் ஏகாந்த வாசத்திற்கு பயன்படுத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.